விருதுகள்-2013 பன் பாடுபொருள் மாமணி-2013
வணக்கம் தோழமைகளே...
ஒரே நடையிலும் ஒரே தலைப்பிலும் ஒரு படைப்பு எனில் அது ஒரு காப்பியமாக அமையலாம்.பல படைப்புகள் ஒரே நடையில் எனில் அது வாசிப்பவனுக்கு சோர்வை சமயங்களில் அளித்து விடும் பல தலைப்புகள் பல நடைகள் எனில் மனதிற்குள் மத்தாப்பு பொறிகள்.-படைப்பவனுக்கும் படிப்பவனுக்கும் !! சரிதானே...?
இவ்வகையில் தளத்தில் பல் பாடு பொருட்களில் பல படைப்புகள் அளித்த இருவர் 2014ஆன் ஆண்டின் முதல் விருதாக "பன் பாடுபொருள் மாமணி-2013 " எனும் விருது பெறுகின்றனர்.
ஒருவர் என் உளங்கவர்ந்த 'வெள்ளைக் குதிரையில் பயணம் செய்தவர் '. இவரது
" யுகங்களுக்கு அப்பாலும்" ,"ஓட்டை குடிசை" "பஞ்சாயத்து" , "விலாசமில்லாத கடிதம்" , "தப்பிக்கவும் தவிர்க்கவும் " .....எனும் கவிதைகள் இவரின் பாடுபொருள் தெரிவுகளுக்கு எடுத்துக்காட்டுகள்....அருமையான படைப்பாளி...
யார் இவர்....?
மற்றவர் பழஞ்சொற்களை வைத்து படைப்பு அளித்து வருபவர்...(இது நடைமுறை நடையில் இல்லாத வகை எனினும் பழஞ்சொற்கள் பலர் அறிய ஒரு வாய்ப்பு எனலாம்...). இவரது "மேற்கத்திய நாகரீகம் ", "அப்பா " ,"தற்கொலைப்பூக்கள் ", "தேடல் பரிசுகள் "....போன்ற கவிதைகள் எவரும் வாசிக்க வேண்டியவைகள் என்க...
இந்த இருவரின் பன் பாடு பொருள் தெரிவுக்காக "பன் பாடுபொருள் மாமணி-2013 " எனும் விருது பெறுகின்றனர்.
ஒருவர் தோழர்.சுசீந்திரன் ....
மற்றவர் தோழர். அனுசரண்...
**************************************************************************
&&&&& "பன் பாடுபொருள் மாமணி-2013 " &&&&&&&
விருது பெறும்
@@@@@@@ தோழர் சுசிந்திரன் -@@@@@@@
வாழ்க.வாழ்த்துவோம் வாருங்கள்...
**************************************************************
&&&&&&& "பன் பாடுபொருள் மாமணி-2013 " &&&&&&
எனும் விருது பெறும்
@@@@@@@ தோழர் அனுசரன் @@@@@@@
வாழ்க.வாழ்த்துவோம் வாருங்கள்...
**********************************************************************