இணையம்
இணையத்தில் நேரத்தை பணயம் வைத்தேன் !
விரையம் ஆனது வீண்பேச்சு !
விஸ்தாரம் ஆனது அறிவுவீச்சு !!
சுற்றும் பூமி சுருங்கிச் சுருங்கி சுட்டெலி ஆனது!
விரிந்த அண்டம் விரலடியில் விசைப்பலகை ஆனது!!
உடலுழைத்து தோளுயர்த்தல் வேண்டாம் என்பேன்! உயர்
உடையணிந்து சிகை திருத்தல் வேண்டாம் என்பேன் !!
உணவருந்தும் இடத்திலேயே உள்ளம் கவர்வேன்! நான் ,
உலகப்பெண்கள் உள்ளங்களில் இடம் பெயர்வேன் !!
அன்று,
கரம் பிடித்து, கால் பதித்து, அருந்ததி பார்த்தோம் !
இன்று,
ஒளி அமைத்து ஒலி கொடுத்து மணம் முடிப்போம் !!
பழத்துக்காக பெற்றோரை சுற்றுதல் - அது அந்தக் காலம் !
உலகம் சுற்றுதல் சுலபம் என்பேன் - இது இந்தக் காலம் !!
குமரிக்கும் இமயத்துக்கும் நடைப்பயணம் - அது அந்தக் காலம் !
பூமிக்கும் புதனுக்கும் விரல் பயணம் - இது இந்தக் காலம் !!
எங்கெங்கு காணினும் சக்தியடா! - அதை ,
இங்கிருந்தே காணிடல் புத்தியடா !!
கர்வம் அல்ல, வீரம் அல்ல, புகழ்ச்சி அல்ல !
இணையம் தந்த விவேகம் இது - வேறென்ன சொல்ல..!!
வாழ்க இணையம் ! இனி கோள்கள் இணையும் !!