செல்ஃபோன் தம்பதிகள்
செல்ஃபோன் மட்டும்
இல்லையென்றால்
என் ஜீவன் என்றோ
நின்றிருக்கும்.
நம்மிருவரையும் இணைக்கும்
கண்ணுக்கு தெரிந்த இறைவன்
உறங்கும் வேளை தவிர
நமக்குள் நடக்கும்
எல்லா நிகழ்வுகளும்
உன்னிலிருந்து எனக்கும்
என்னிலிருந்து உனக்கும்
சங்கமம் செய்யும் நம் துணைவன்.
நம் உணர்வுகளை பறிமாறும்
ஒரு உணர்வில்லா உன்னதம்
செல்ஃபோன்பற்றி
இன்னும் எவ்வளவோ
சொல்லத் தோன்றுகிறது, முடியவில்லை. ஏனெனில்,
நாங்கள் பேசவேண்டியதே
இன்னும் நிறைய இருக்கிறது.