பயம் - நிமிடக் கதைகள்

டாக்டரின் முகத்தைப் பார்த்தவாறே, 'என்ன சொல்லப்
போகிறாரோ' என்ற அச்சத்தில் உட்கார்ந்திருந்தார்
சீனிவாசன்.

எல்லா ரிப்போர்ட்டையும் படித்துப் பார்த்துவிட்டு
டாக்டர் அமைதியாகச் சொன்னார்...'கவலைப்பட
எதுவுமில்லே...எல்லாம் நார்மல்தான்.!
-
நன்றி சொல்லிவிட்டு, வெளியே வரும்போது சீனிவாஸ்
மனைவியிடத் சொன்னார்....'அடுத்து ரிசப்னிஸ்ட்
முகத்தை பயத்தோடு பார்க்கணும்...
பில் எவ்வளவு வரப்போகுதோ?
-
--------------------------------------------------
>பர்வதவர்த்தினி

எழுதியவர் : பர்வதவர்த்தினி (19-Dec-13, 11:36 am)
பார்வை : 141

மேலே