வார்த்தை - நிமிட கதை
வார்த்தை - நிமிட கதை
***********************************
நான் மட்டும் அப்போ வீட்ல இருந்திருந்தா
கண்டபடி பேசிட்டுப் போன அவனோட நாக்கை
அறுத்திருப்பேன்...'' என்று அண்ணன் குதித்தான்
-
தங்கை அவனைச் சமாதானம் செய்து,
''அரைகுறையா காதில் வாங்கிட்டுக் கத்தாதே...
இத்தனை பேச்சையும் பேசினது உங்கப்பா...
வந்தவன் பாவம் வாயே திறக்கவில்லை'' என்றாள்
-
''அதானே பார்த்தேன்...சூடா இப்படித்தான் கேட்கணும்..
அப்பத்தான் அவனுக்கு புத்தி வரும்'' என்றான்
-
-------------------
>பர்வதவர்த்தினி