மீட்டர் - நிமிடக் கதை

மீட்டர்...! - நிமிடக் கதை
****************************************
உடம்பிலே தெம்பிருந்தா நடந்தே வந்திருப்பேன்,
இதுக்கா முப்பது ரூபா! என்று அந்தக் கிழவி கத்தினதும்
ஆட்டோகாரர் பொறுமையோடு கேட்டார்...

'"பாட்டி, அந்த நாள்ல அஞ்சு பைசாவுக்கு வெற்றிலே
வாங்கினே...இப்ப அதை எவ்வளவு கொடுத்து வாங்கறே..?
-
பாட்டி விடவில்லை...''அட போய்யா....அப்பவும் சரி, இப்பவும்
சரி.. நான் வெற்றிலையே போடறதில்லே....''
என்றவாறே இருபது ரூபாய் நோட்டில் பேச்சை முடித்தாள்

எழுதியவர் : ராம்மலர் (19-Dec-13, 11:47 am)
பார்வை : 122

மேலே