சனவரி 3 இன் சிறப்பு
முன்னர் நடந்தது பின்னரும் நடந்தால்
இன்னும் நடக்கும் என்றிங்குக் கூறுதல்
நன்னிய சோதிடம் என்றே ஆகிடும்
பின்னிடும் வாழ்வினைப் பிட்டு வைத்திடும்
நோஸ்த்ரா டாமசும் ருட்யார்ட் கிப்லிங்கும்
ஜோன் ஆ:ப் ஆர்க்கும் ஐசக் நியூட்டனும்
ஓர்ப்புடன் நின்று ஓக்கம் அடைந்ததை
ஓதிட வைப்பது ஒரே நாள் பிறப்பாம்.
பட்டாம் பூச்சியைப் போலிங்குப் பறந்து
கொட்டுவேன் தேனீயாய் எதிர்ப்பவர் தன்னை
செகத்தினில் சிறந்தவன் நானெனக் கூறிய
முகமதலி பிறந்ததும் சனவரி மூன்றில்
வீரத்தோடே வெள்ளையரை எதிர்த்து நின்ற
தீரர்களில் முதல்வனாம் வீர பாண்டியக்
கட்ட பொம்மன் இம்மண்ணில் உதித்ததும்
தொட்டால் துலங்கிடும் சனவரி மூன்றில்.
சனனம் எடுத்ததால் சனவரி மூன்றில்
கனகம் கொண்டே எழுதிடத் தூண்டும்
புவனம் போற்றிடும் முதல் பெண்ணரசியாய்
கவனம் ஈர்ப்பவர் வேலு நாச்சியார்.
மகர ராசியில் பிறந்தவர் வாழ்வினில்
சிகரம் தொடுவது சம்பூதப் பலனென
பகர வைப்பதும் பத்தாம் சின்னமே
நிகரிலை ஆட்டுத் தலைமீன் வாலுக்கே.