உங்கள் துரோகத்திற்கு நன்றி

நாம்... ரொம்பவும் நேசிக்கும் ஒருவரால்தான்,
'துரோகம்' எனும் பரிசையும்...
புன்னகைத்தபடியே... கொடுக்க முடிகிறது!

மனச்சாட்சிகள் எப்பொழுதும்
தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..!
அது... துரோகம் செய்தவரையும்
ஒருநாள் தட்டியெழுப்பும்..!!
காலம் கடந்த ஞானத்தால்...
கோலம் மாற்ற முடியாது!
காலைச் சுற்றிய பாம்பாக...
மனச்சாட்சியின் தொண்டைக்குழியை,
இறுக்கிக்கொண்டேயிருக்கும்...!!

துரோகத்தின் தடங்களில்...
அனுபவப்பாதை விரிந்து செல்லும்...!
தாங்களே பின்னிய வலையில்,
துரோகிகள் சிக்கித் தவிக்க...
மற்றவரின் பயணம் மட்டும் தொடரும்!
மீண்டுமொருமுறை துரோகச் சந்திகளில் தரிக்காத,
தனித்த நீண்ட பயணங்களில்......
மாற்றங்கள் இருக்கும்...!
ஏமாற்றங்கள் இருக்காது...!!

இனிமையான பொழுதொன்றில்....
திரும்பிப் பார்க்கும் போது,
ஏறிவந்த படிக்கட்டுகளாய் துரோகங்கள்,
எங்கோ தொலைவில்... கறுப்பு வெள்ளையாய்!
வலிகளை வழிகளாக்கி...
துரோகங்களையும் அனுபவங்களாக்கி...
வாழ்க்கையினை வண்ணங்களாக்க உதவிய...
துரோகங்களுக்கும்... அதைப் பரிசாகத் தந்தவர்களுக்கும்,
ஒரு நன்றி சொல்லியே ஆகவேண்டும்!!!

உங்கள் துரோகத்திற்கு நன்றிகள்..............!

எழுதியவர் : ஒருவன் கவிதை (21-Dec-13, 11:12 pm)
பார்வை : 625

மேலே