பொங்குமாப் பொங்கல் பொங்கணும் பொங்கல்
பொங்கலோப் பொங்கல்.
பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?
பொங்கணும் பொங்கல்.
கரும்பும் மஞ்சளும் வாங்கிடவே
கடைத் தெருப் பக்கம் கால்வைக்க
விரும்பும் விலையில் இரண்டும் இல்லே.
வேண்டாமென திரும்பவும் மனம் இல்லே.
பொங்கலோப் பொங்கல். பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்.பொங்கணும் பொங்கல்.
நாளுக்கொரு விலைவாசி,
ஆளுக்கொரு விலைப்பேசி,
ஆதரவற்ற நிலையிலே எளியோர்கள்
ஆனந்தப் பொங்கல் கொண்டாட முடியலே.
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?பொங்கணும் பொங்கல்.
ஆண்டுதோறும்
அடியெடுத்துவரும் தைமகளை
ஆனந்தமாய் வரவேற்க
ஆதரிப்போர் எவருமில்லை.
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?பொங்கணும் பொங்கல்.
காலங்காலமாய் இனிமையில்
கனிந்துவரும் தைப் பொங்கலை
பணிந்துப் போற்றி பார்புகழ
துணிந்து செய்வார் எவருமில்லே
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?பொங்கணும் பொங்கல்.
தைத் திங்கள் திருநாளில் - வாய்த்
திறக்கும் தலைவர்களின் வாழ்த்துக்கள்
தன்னம்பிக்கை துளிராத வார்த்தைகள்.
தவிப்பில் கொண்டாடும் எளியோர்கள்.
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?பொங்கணும் பொங்கல்.
சட்டமும் திட்டமும் அரசின் ஆணைகள்.
சங்கடமும்,தரித்திரமும்
எளியோர்களின் இணைப்புகள்.
ஏற்றமே இல்லாத அரவணைப்புகள்.
எங்குப் பொங்கும் இன்பத்தின் பிணைப்புகள்.
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?பொங்கணும் பொங்கல்.
நெல்மணிகள் நிமிர்ந்திட்ட நிலமெல்லாம்
நிழல் காணா வற்றியப் பாலைவனங்கள்.
மும்மாரி மழைப் பெய்யும் நிலைமாறி,
முகம் மாறி விளைகின்ற பூமியானது.
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்? பொங்கணும் பொங்கல்.
வானம் பார்த்து வளர்ந்த பூமியெல்லாம்
வேலிக்காத்தான் மரங்களை வரமாக பெற்று
விளையாத பூமியாக வாடி வருகிறது.
விதைத்த விதையெல்லாம் விளையாமல் போனது.
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?பொங்கணும் பொங்கல்.
விதைத்தூவி நாற்று நட்டு களையெடுக்கும்
விவசாயியெல்லாம் வேறுதிசை செல்வதால்
விளைச்சலும் இல்லாமல் வான்நீரும் இல்லாமல்
வறண்ட பூமியாய் களை இழந்து நிக்குது.
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?பொங்கணும் பொங்கல்.
நிலச்சுவான்தார்களெல்லாம் நிஜமான
நிலங்களை எல்லாம் நிழலாக மாற்றிட
நில விற்பனையாளர்களாய் மாறிவிட்டனர்.
நெல்மணிகளை சுமந்த நிலமெல்லாம்
கல் மனைகளாய் மாறிவிட்டன.
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?பொங்கணும் பொங்கல்.
நிலமும் காணலே. விவசாயியும் காணலே.
நலமும் தொடரலே. நிலபலமும் படரலே.
நெல்மூட்டைகள் குவியலே.அறுவடையும் இல்லே.
பொங்கலோப் பொங்கல்.பொங்கலப் பொங்கல்.
பொங்குமாப் பொங்கல்?பொங்கணும் பொங்கல்.