ஈசனேசு தோன்றுவார்

தேவனவன் வந்தான் திருவசனம் தந்தான்
பாவிகள் மாந்தரை பாரினில் சந்தித்தான்.
பாவங்கள் போக்க பகவான் பலியானான்
தேவையாய் ரத்தமும் தூய்மைக்கா யீந்தான்

தேவனவன் வந்தபாதை தேடியத் தூயோரும்
பாவங்கள் நீங்கத்தான் பச்சைரத்தம் சிந்தியும்
ஆவிகள் போயினும் ஆறா தவதரித்தும்
பாவிகள் வாழ்வதும் பார்ப்பனோ ஏசனும்! .

உயிர்த்தெழுந்த ஈசனேசு உற்றவேளை பூமியில் .
வியந்திடத் தீமைகளை வீழ்த்திடத் தோன்றுவான்.
ஓய்ந்திடும் பாவங்கள்!ஓங்கிடும் நன்மைகள்!.
பாய்ந்திடும் ஆறுகள்!பாராகும் சீர்மைகள்.!

வருகைக்குக் காத்திருப்போம் வானம் தொழுதே
இறைவனை எண்ணி இரைவோம் அழுதே!
அருமைக்கு முன்சிறுமை ஆகிடும் பொழுதே
பெருமை அறிவோம் பெருமான் முழுதே!

கானம் இசைத்துக் கரைந்து துதிப்பமே!
வானம் கிழித்தவன் தானே எழுவனே!
காலம் இதுவெனக் காட்ட வருவனே!
மூலக் கருணை முதலோன் புதல்வனே!

பரமபிதா பாலனேசன் புனிதனே போற்றி!
அருளனே ஆண்டவா அறனே போற்றி!
சிலுவை சுமந்து சிறுமை பொறுத்து
வலிமை உணர்த்திய வல்லவனே போற்றி!

கொ.பெ.பி.அய்யா.







.

எழுதியவர் : கொ.பெ .பி.அய்யா. (24-Dec-13, 11:51 pm)
பார்வை : 89

மேலே