வறுமையின் விழிகளுக்கு விருந்தான

வறுமையின் விழிகளுக்கு விருந்தான
வாழ்க்கை.......


அறியாத பருவத்தில் அடுத்த வீட்டின் ஆடம்பர

வாழ்க்கைக்கு ஏக்கம் !

பள்ளி பருவத்தில் வகுப்பு தோழியின்

மிதி வண்டிக்கு ஏக்கம் !

கல்லூரி பருவத்தில் சுற்றுலா செல்லும்

தோழியரின் கற்பனைக்கு கூட ஏக்கம்!

காதல்,

என்னை பார்த்து மற்றவர் ஏங்க

எதோ நான் சாதித்த

யாருக்கும் கிடைக்காத ஏதோ எனக்கு

கிடைக்க போகிற பெருமிதம்


காதல் திருமணம்

எல்லாம் கிடைத்து விட்டதாய் எண்ணி

இருப்பதை இழந்து நிற்பது

இழந்ததோ

தாயின் அன்பு

தந்தையின் பாசம்

அண்ணனின் அரவணைப்பு

அக்காவின் நட்பு

தற்போது தான் உணர்ந்தேன்

வறுமை வாழ்கையின் முன்பகுதியில் அல்ல

உண்மையான சந்தோஷம் இழந்து நிற்கும்

இந்த வாழ்க்கை தான் வறுமையின் விழிகளுக்கு

விருந்தான வாழ்க்கை

(பெற்றோரின் சம்மதம் இன்றி காதல் திருமணம் செய்ததால் நான் பெற்ற அனுபவம் )

எழுதியவர் : தமிழ் Nesi (26-Dec-13, 1:40 pm)
சேர்த்தது : Tamil Nesi
பார்வை : 89

மேலே