நினைவு நாள்

ஒன்றாக பிறந்தோம்
ஒன்றாக வாழ்ந்தோம்
பாசத்தின் பிறப்பிடமானோம் இன்றோ
பிரிந்து கிடக்கிறோம் .
உன் கரம்பிடித்து நடை பழகினேன் அன்று
இன்று நானே நடைபிணமானேன் நீ
இல்லாமல் அண்ணா,
கனவுகள் கலைந்து போனது
நினைவுகள் நித்தம் நித்தம் வதைக்கிறது நீ
இல்லாமல் அண்ணா,
அன்று உன் பிறந்தநாளை எதிர்பார்த்துக்
காத்திருப்போம் ஆனால்
இன்றோ உன் நினைவுநாள்,
நீ எங்களின் நினைவில் மட்டுமல்ல அண்ணா
எங்களின் உயிர் சுவாசம்,இதயத்துடிப்பு எங்களின்
உயிர் அண்ணா நீ
இல்லாமல் எங்களுக்கு ஒவ்வொரு நொடியும்
மரணம் தான், அண்ணா உன்
நினைவில்லாத அந்த நாள் எங்களின்
நினைவு நாளாகத்தான் அமையும்,
உன் நினைவோடு உயிரிருந்தும் உயிரற்ற
நடை பிணம் தான் அண்ணா
நீ இல்லாமல் நாங்கள்,
நீ உறங்குவது கல்லரையிலென பலர்
நினைக்கலாம் ஆனால் நீ
உறங்குவதோ எங்களின் இதய அறையில்தான்,
அன்று நாம் வாழ்ந்த நாட்களில் கண்ணீருக்கு
அர்த்தம் புரியவில்லை இன்றோ
கண்ணீர் கடலில்தான் எங்களின் வாழ்க்கை
பயணம் அண்ணா நீ இல்லாமல்,
நம் பிரிவு உடல்ரீதியாக இருக்கலாம் உள்ளத்தால்
நம்மை அந்த கடவுளால் கூட பிரிக்க
முடியாது ஏனென்றால் எங்களுக்குள்
கலந்த எங்களின் உயிர் அண்ணா நீ,
கடவுள் இருந்தால் அவனிடம் ஒருவரம்
என்னை உன்னிடத்தில் சேர்க்க வேண்டி ...!!!!
கருவறையில் தொடர்ந்து கல்லறையில்
முடிகிறது மனித வாழ்க்கை ......இதில்
ஆயிரம் தவிப்புக்கள் அவஸ்தைகள் துன்பங்கள் ...!!!
-உன் உயிரான உன் அன்பு தம்பிகள்
பார்தீ ,சின்ன

எழுதியவர் : பார்த்தீபன் (27-Dec-13, 2:38 pm)
Tanglish : ninaivu naal
பார்வை : 811

மேலே