இனி பெண்மை சுடட்டும்

முண்டாசு கவியின் மூச்சே
ஏன் முடிச்சுகளுகிடையே
முடங்கி கிடக்கிறாய் !

சட்டங்கள் படிக்கிறாய்
சட்டத்தின் ஓடைகள் மட்டும்
ஏன் உனக்கெதிராய் !

பட்டங்கள் பெற்றாய்
பதவிகள் மட்டும்
ஏன் உனக்கு பலி இடமாய் !

எங்கும் நிறைந்த கடவுள் கூட
அங்கும் இருப்பதில்லை
உன்னை காக்க !

மாதுவை மதுவாய் குடிக்கும்
மனிதம் மாற !
பெண்ணாய் இருந்து மண்ணாய்
போனது போதும் !

உன்னை தொட்டு தோடிபடியவனுக்கு
மங்களம் பாடிட!
மங்கையென மகதுவம்பெற
இனியேனும் சுடட்டும் பெண்மை !

எழுதியவர் : பூவிதழ் (27-Dec-13, 3:20 pm)
பார்வை : 1098

மேலே