மார்கழி காதல்
இந்த மார்கழி வேளையிலே
பனிப் பொழியும் காலையிலே
மழை போல வந்து என்னை நனைத்தாயே!
தேவதை போல பட்டு உடுத்தி
கூந்தலின் ஈரம் சொட்டச் சொட்ட
நீ வீதியிலே கோலம் போடும் அழகை
நான் ஜன்னல் ஓரத்தில் இருந்து ரசித்தேன்!
உன் கோலம் கூட என்னைப் பார்த்து வெட்க்கப்படுகிறது.........
அப்போது ஏனடிப் பெண்ணே உன் காதலை
என்னிடம் இருந்து மறைக்கிறாய்
சொல்லிடு பெண்ணே உன் காதலை
என்னால் இந்த காதல் சித்ரவதையை தாங்க முடியவில்லை .........
விரைவில் உன் வரவு காதல் வரவாக காத்திருக்கிறேன்..........