கேள்வியின் வேள்வி தொடங்கட்டும்

கேள்விக்கு உடன் பதில் கிடைத்துவிட்டால்,
தேடல்கள் இங்கு உதிப்பதில்லை...
தேடலை மனது மறந்துவிட்டால்,
ஆறாம் அறிவின் பயனில்லை...

கேள்விகள் கேளு
பதில்களை தேடு
உன் ஞானம் கரைந்து போய்விடுமோ?
தடுமாற்றம் வேண்டாம்
தோற்றம் மாறும்
உன்னை உலகம் தவிர்திடுமோ?

எழுதியவர் : மயில்வாகனன் (28-Dec-13, 2:09 pm)
பார்வை : 543

மேலே