புதுச்சேரியில் இருந்து
வந்தது...
ஒரு பாராட்டுப் பத்திரம்
கைகளில் வாங்கியதும்
சந்தோச மழை கொட்டியது
படித்துப் பார்த்ததும்
மொத்தமாய் கரைந்து போனேன்
இலக்கிய உலகில்
இதுவொரு சாதனை என்று
பூரித்து மலர்ந்தேன்
என் விலாசம் தேடி வந்த
அந்தச் சான்றிதழால்
எனக்கொரு விலாசம்
தளத்தில்
கிடைத்ததே என்று
பெருமையடைந்தேன் !
புதுச்சேரி இணையதளப் படைப்பாளிகள் பேரவையைச் சார்ந்த சான்றோர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த
நன்றி ! நன்றி !!
இப்படிக்கு.,
"நட்புணர்வு மிளிர் வரியாக்க நன்மணி"
ரத்தினமூர்த்தி