27 எல்லாம் தனக்கே வேண்டுமென நினைப்பதுதான் வேடிக்கை
சொந்தக் கவிதை -28
கனிகொடுத்தமரம் அதன் சுவையை ருசித்ததில்லை
மலர்கொடுத்தக்கொடி அதன் மணத்தை முகர்ந்ததில்லை
குளிர்கொடுத்தச்சோலை அதன் குளிரில் இளைப்பாரியதில்லை
முகம்தழுவிய தென்றல் அதன் மென்மையை அறிந்ததில்லை
தாகம்தணித்த ஓடை அதன் குளிர்ச்சியை பருகியதில்லை
முத்தைக்கொடுத்த சிப்பி அதன் அழகை ரசித்ததில்லை
நாதம்கொடுத்த வீணை அதன் நாதத்தில் மயங்கியதில்லை
பளபளப்பைப் கொடுத்த தங்கம் அதன் பளபளப்பில் உருகியதில்லை
மனநிறைவைக்கொடுத்த கவிதை அதன் மனநிறைவில் திளைத்ததில்லை
தத்துருவமாய் அமைந்த சிற்பம் அந்த தத்துருவத்தில் நிலைகுலையவில்லை
ஓளிகொடுத்தக்கதிரவன் அதன் ஒளியால் பொறாமைப்படவில்லை
இவையாவும் தனக்கென ஒன்றும் வைத்ததில்லை
ஆனால் இதனையெல்லாம் அனுபவிக்கும் மனிதன்மட்டும்
எல்லாம் தனக்கே வேண்டுமென நினைப்பதுதான் வேடிக்கை!