குட்டு

அடைமழையில் நான் நனைய ஆயத்தமான பொழுது அம்மா திட்டினாள்,
மாடியில் உள்ள உன் துணிகளை எடு என்றாள்,
அப்பொழுது பக்கத்துக்கு வீட்டு பருவ மங்கையும் வந்தாள்.
இது காதலா என என் கண்ணில் கனல் வீச,
அடைமழையிலும் அனல் பற்றியது எனக்குள்,
அவளுக்கு பயம்,
அடுத்த நாள் காலையில் அவள் என் வீட்டில்.
குதூகலத்தில் நான் ஆசனத்தில் அமர்ந்திருக்க,
அவள் என்னை நோக்கியவாறு என் அம்மாவின் காதை கடித்தாள்,
மறுநிமிடம் என் ஆசனத்திலிருந்து ஒரு பாவாடை துணி அவளுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. அப்பொழுது தான் எனக்கு விழுந்தது ஒரு குட்டு.

எழுதியவர் : பூபாலன் (30-Dec-13, 4:03 pm)
சேர்த்தது : பூபாலன்
Tanglish : kutu
பார்வை : 148

மேலே