வியாபாரம்

தெய்வீக தொழில்கள்
வியாபாரம் ஆனதிங்கே
பள்ளி அமைத்திட
அறிவை பெருக்கிட
இல்லாமை ஒழித்திட
கர்மவீரன் காமராஜ்
ஆயுத்தம் செய்திட்டார்
எழைசிறாரை அழைத்திட்டார்
மதியஉணவை தந்திட்டார்
இன்றுபெருமைமிகு கல்விதனை
லட்சங்களை விலைபேசி
பள்ளிகளை தொடங்கிட்டார்
பெற்றோரும் பெருமையுடன்
வரிசையில் நின்றிட்டார்
விண்ணப்பம் பெற்றிட்டார்
பிள்ளைதனை சேர்த்திட்டார்
பெருமையுடன் சொல்லிட்டார்
பலலட்சம் செலவிட்டார்
தெய்வீக கல்வியும்
வியாபாரம் ஆனதிங்கே
தெய்வீக தொழில்கள்
வியாபாரம் ஆனதிங்கே
கவலையுடன் சென்றிட்டார்
ஆலயம் தொழுதிட்டார்
கவலைதனை மறந்திட்டார்
முன்றுவலம் வந்திட்டார்
இன்றுசாமிதனை கண்டிட
வகைவகையான வரிசைகள்
ஐம்பதுக்கு நூறுக்கு
வி ஐ பிக்கு தனிவரிசை
எல்லாமே வியாபாரம்
தெய்வீகம் தொலைந்தது
சோகத்துடன் எழுதிட்டேன்
கருத்துதனை பகிர்ந்திடுங்கள்