மறதி
நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே !!
இறக்கத்தில் இருந்த உன்னை உயரே
பறக்க வைக்க எத்தனை செய்தவன்
மறக்க நீ நினைக்கிறாய்
இரக்கம் உண்டா உனக்கு ?
பாசத்தில் நான் உனக்கு செய்ததை
வேஷத்தால் மோசம் செய்தாய்
என்றும் நான் மாற மாட்டேன்
இன்றும் உதவ நான் உண்டு
உன்னை நினைக்க மறக்க மாட்டேன்