எங்கெங்கு காணிலும் காதலடா
நினைவுகளில்....
காயாமல் ஈரமாய்.....
நேற்றைய அவளது முத்தம்
இன்னும்.......
இளம் தளிர்களில் பனித்துளியாய்.....!
நெருங்கிச் சென்று
நுனி விரலை மோத வைத்து....
நெகிழ்ந்து விழாமல்
நேர்த்தியாக எடுக்க முயல்கிறேன்.....
மீண்டும் குளிர்கிறது....
ஆஹா....
சுடாமல் சுடுகின்ற
சுகமான காதல் நினைவு.....!
வட்ட நிலா யாழ் முகமோ - அதில்
வாசிக்க நரம்போ இரு இதழ்கள்....?!
இயற்கையை ரசிக்கும் போதும்....
இனியவளே ஏன் குறுக்கே வந்தாய்..?
இதோ பார்.....
வளைகின்ற நதி அதிலும்....
நெளிகிறதே உன் நினைவலைகள்.........