♥பிழை பட்ட கவிதை♥

இறைவன் சிந்தனையில்

ஒரு நிமிடம் சிதறிவிட்டேன்
அதனால் தான்
பிழை பட்ட கவிதை
ஆனேன் நான்...!!!

தாய், தந்தை சாதனையில்
பல வருடம் வாழ்கிறேன்
அதனால் தான்
புதுக் கவிதை
ஆனேன் நான்...!!!

உள்ளத்தின் வேதனையில்
ஒவ்வொரு நாளும் வளர்கிறேன்
அதனால் தான்
மரபுக் கவிதை
ஆனேன் நான்...!!!

அறிவின் திறமையில்
ஒவ்வொரு நாளும் உயர்கிறேன்
அதனால் தான்
ஹைக்கூ கவிதை
ஆனேன் நான்...!!!

தன்னம்பிக்கையின் வலிமையில்
ஒவ்வொரு நாளும் வெல்கிறேன்
அதனால் தான்
பிழைக்க தெரிந்த கவிதை
ஆனேன் நான்...!!!

நம்பிக்கையின் வாழ்க்கையில்
ஒவ்வொரு நாளும் ஓடுறேன்
அதனால் தான்
உழைக்க தெரிந்த கவிதை
ஆனேன் நான்...!!!

எழுதியவர் : இதயவன் (3-Jan-14, 10:05 pm)
பார்வை : 127

மேலே