ஆன்மாவின் ஆத்மா

யாரும் பார்த்துவிடாத நேரத்தில் ஓங்கி
அழவேண்டும் போல் இருக்கும்
சில பல நேரங்களில் ....!!!

கிடைக்கும் நேரமே நித்திரைக்கானதாய் இருக்கும் போது
எப்படி அழுது கொள்வது .....!!!

அப்படிதான் அழுதாலும் நித்திரையிலும் எழும்பி விடுகிறாள்
மகள் ....!!!

அவளுக்காக அழுகையை அடைவு வைத்துவிட்டு
முகமூடியோடு உலாவுகிறது
ஆன்மாவின் ஆத்மா ....!!!

எழுதியவர் : Akramshaaa (4-Jan-14, 9:37 pm)
பார்வை : 81

மேலே