நினைப்பதை சொல் இமாம்
உலகம் பிரயோசனம் இல்லையென்று நீ
நினைத்தால்
நீ பிரயோசனம் இல்லையென்று
உலகம் நினைக்கும்
கவிதை தேவையில்லையென்று நீ
நினைத்தால்
நீ தேவையில்iயென்று
காதல் நினைக்கும்
நான் தேவையில்லையென்று நீ
நினைத்தால்
நான் தேவைதானென்று
மரணம் நினைக்கும்
மரணம் தேவையில்லையென்று காதல்
நினைத்தால்
நாம் தேவையில்லையென்று
நரகம் நினைக்கும்
நரகம் தேவையில்லையென்று நாம்
நினைத்தால்
நல்ல மனிதர்கள் நாம்தானென்று
இவ்வுலகம் நினைக்கும்