ஏழை மக்களை வாழவிடு

ஊரெல்லாம்
உன் பேச்சு உனக்கோ
பெரும் மகிழ்ச்சி..

உனக்கு இல்லை
உறக்கம் நீ என்றும்
எரிந்து கொண்டே
இருக்கிறாய்...!

ஆனால் ஏழை
மக்களோ உன்னை
வாங்க முடியாமல்
வாழ்கையிலே
வறுமை என்னும்
நெருப்பில் அகப்பட்டு
எரிந்து கொண்டே
இருக்கின்றனர்

அரன்சாங்கமோ
உனக்கு மணி
மகுடம் சூட்டி தங்களின்
கஜானாவை
பெருக்கி
கொள்கின்றனர்
விலை ஏற்றம் என்ற
பெயரால்...!

வறுமை
எனும் கோட்டிற்குள்
இருப்பவர்க்கு
இந்த நாடகம்
அறியுமா...!

உன் விலை
ஏற்றத்தால்
விளைபொருளும்
விதவை ஆனதே...!

உன் அநியாய
விலையை குறைத்து
விடு உன்னை நம்பி
வாழும் ஏழை
எளிய மக்களை
வாழவிடு...

எழுதியவர் : லெத்தீப் (5-Jan-14, 1:50 pm)
பார்வை : 91

மேலே