சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்குது

நண்பர்கள் , இந்த சொலவடையை அடிக்கடி கேட்டு இருக்கலாம் . அதென்ன "சிங்கி " ..? ரொம்ப நாளாக எனக்குமே இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் தான் இருந்தது... எதேச்சையாக 1960 களை சேர்ந்த ஆனந்த விகடன் பத்திரிகையை சமீபத்தில் புரட்டி கொண்டு இருந்த போதுதான் எனக்குமே இதன் அர்த்தம் தெரிய வந்தது...

"சிங்கி" என்பது ரெண்டு காசுகளை வைத்து விளையாடுவது ....ஒரே சமயத்தில் ரெண்டு காசுகளையும் சுண்டி விட வேண்டும் .. இரண்டுமே ராஜாவாக ( தலையாக ) விழுந்தால் வீசியவர் ஜெயித்தார் ....சிங்கி அடித்துவிட்டது....!!! மாறி விழுந்தால் எதிரி ஜெயித்தார்... பொதுவாக இரண்டு காசுமே ராஜாவாக விழுவது ரொம்ப , ரொம்ப கஷ்டம் ...

அதனால்தான் மிக சிரமமாக செய்ய கூடிய விஷயத்தை இப்படி கிராமத்தில் சொல்வார்கள் ... " சிங்கி அடிக்குது" என்று... !!!

ஒவ்வொரு நாளும் " சிங்கி" தானே அடிக்குது இப்போ ... இல்லையா நண்பர்களே...??!

எழுதியவர் : முருகானந்தன் (7-Jan-14, 9:02 am)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 94

மேலே