அதீத பாசம்

முன்புபோல் இல்லை அவன்
இப்பொழுதெல்லாம்
அம்மாவின் மேல் அதீத பாசம்
அவனுக்கு....

அம்மாவிற்குப் பிடித்த
வகைவகையான
உணவு வகைகள் செய்து,
தான்
உண்பதற்கு முன்பாக,
அம்மாவை
உணவருந்த
வருந்தி வருந்தி அழைக்கின்றான்
அமாவாசைதோறும்
கா......கா......வென

எழுதியவர் : usharanikannabiran (7-Jan-14, 2:59 pm)
Tanglish : atheetha paasam
பார்வை : 134

மேலே