ஆண்கள் பிழைக்கட்டும்
பெண்ணே
கொஞ்சம் திரும்பு
காதலைப் பாட
கவிஞர்கள் தேடுகிறார்கள். . .
பெண்ணே
கொஞ்சம் சிரி
மாலையில் அல்லி
மலர்ந்து விட்டு போகட்டும். . .
பெண்ணே
கொஞ்சம் விரும்பு
காதலும் உன் வசம்
காதல் கொள்ளட்டும். . .
பெண்ணே
கொஞ்சம் நடி
துடிக்கும் என் இதயம்
துயில் கொள்ளட்டும். . .
பெண்ணே
கொஞ்சம் படி
கல்லறையில் இவன்
காணாமல் போனான் என்று. . .
பெண்ணே
கொஞ்சம் முகம் மறை
மிஞ்சும் ஆண்களாவது
பிழைத்து விட்டுப் போகட்டும். . .