நானும் இரவும்
நிசப்தங்களை மீறி
சுவர்க் கோழிகளின்
சங்கீதம்
ஒலிக்கின்றன
கான்கீரிட்
சுவர்கள்
அழுத்துகின்ற
சத்தங்கள்
கிறுக்கல்களாகின்றன
அவ்வப்போது
காதில்
ரீங்காரமிடும்
கொசுக்கள்
உறக்கத்தை
தழுவி விட்டன
நாளெல்லாம்
அலறிய
கைப்பேசிக்கள்
மௌனங்களை
பேசுகின்றன
தெரு நாய்கள்
இருத்தலை
அறிவிக்க
காற்றசைவிற்கும்
குரைக்கின்றன
மெத்தையில்
சில
மூட்டைப்பூச்சிகள்
என் வரவை
எதிர் நோக்கியுள்ளன
விளக்குகள்
கண்ணசைத்து
உறக்கத்திற்கு
அழைக்கின்றன
உறக்கத்தை
தொலைத்து
ஊர் ஊராக
சுற்றிக் கொண்டு
நாடோடி வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது