வருடங்கள்
வயதின்
ஓட்டத்திற்கு
வருடங்கள்
சாட்சியாகிறது
புத்தி
தெரிந்த நாளில்
முதல் விருப்பமாய்
இருந்த விஷயங்கள்
மறந்து போய் விட்டது
வருடங்களில்
மாதங்கள்
நாட்கள்
கிழமைகள்
ஒன்றென்றாலும்
அனுபவங்கள்
வலிகள்
படிப்பினைகள்
வேறு தான்
இந்த நாள்
இன்றைய
தெளிவு
பின்னோக்கிய
நிகழ்வுகளில்
நினைவுகளில்
பெருமூச்சை
வர வைக்கிறது
வயதின்
வீர்யத்தில்
புது வருடமோ
பழைய வருடமோ
எதுவும்
புதிதில்லை
எல்லாம்
ஒன்றுதான்
சலிப்புகள்
நிஜம்
நான்
எனது
குடும்பம்
தொழில்
உறவுகள்
பணம்
சேமிப்பு
கடமைகள்
என
மூழ்கிப் போய்
கடந்து கொண்டிருக்கிறது
வருடங்கள்.