தாயாக மாறிடுங்கள் தாயிடம்

தாய் சேய் உறவே
தரணியில் உயர்வு !
மறுக்காது உள்ளங்கள்
மறக்காது நெஞ்சம் என்றும் !
உயிர் வாழும் அன்னை
உயிராக வளர்க்கும் உன்னை !
அன்னம் ஊட்டிடும் உனக்கு
அன்பும் பாசமும் கலந்திட்டு !
ஐந்தறிவு அன்னைகளும்
ஆறறிவுக்கு இணையே !
அமுதூட்டும் காட்சியே
அழகான சாட்சி இங்கே !
புசித்திட்ட உணவை காகமும்
பசிக்கும் பிள்ளைக்கு ஊட்டுகிறது !
வற்றாத பாசத்தின் வடிவமது
வாடாத தாய்மையின் சின்னமது !
செவ்வாய் கிரகமே சென்றாலும்
இவ்வாய் சுவையும் மாறிடுமோ !
சந்திரனுக்கே குடிபெயர்ந்தாலும்
சிறிதேனும் குறையாது தாய்ப்பாசம் !
தாயின் மடியில் உறங்கிடவே
தாலாட்டு பாடியதும் மறந்திடுமோ !
தாயின் நெஞ்சம் மகிழ்ந்திடவே
தாயாக மாறிடுங்கள் தாய்க்கே !
பழனி குமார்