நம்ம கிராமம்
பாடல் எழுத வேண்டுகிறேன்
பாடு பொருளாய் நீவர வேண்டுகிறேன்
காதல் செய்ய வேண்டுகிறேன்
கட்டிபிடித்து முத்தம்செய்ய வேண்டுகிறேன்
கோழி கூவும் முன்னே
கோலம் போட்ட பெண்கள் எங்கே
குளித்து முடித்து கொண்டை நிறைய
பூவைத்த அழகு எங்கே
இருகையில் குடம் தூக்கி
இல்லாத இடுப்பிலதை வைத்து
நீர் மொண்டு வந்த
நிலவுகள் எங்கே
நடந்து வரும் அழகு பார்த்து
நிஜநிலவும் நாணுமே
நாணம் கொண்ட பெண்கள்
நாணல் போல வருவர்
காணும் ஆண்கள் கூட்டம்
மூங்கில் போல வளைவர்
அல்லிமுதல் ஆம்பல்வரைபூத்திருக்கும்கிராமம்
அதிகாலை சூரியனை எழுப்பி விடும் கிராமம்
வெள்ளரிக்கா சிரிப்புக்கு சொந்த கிராமம்
வில்லங்க சூது வாது இல்லாத கிராமம்
கானம் பாடுகிறோம்
கடந்த கால நினைவை தேடுகிறோம்
பானக் கஞ்சி பழைய சோறு
சாப்பிட்ட ருசியைத் தேடுகிறோம்
மஞ்சள் குங்கும முகம் கண்டோம்
மங்கலம் அதில் துலங்க கண்டோம்
வஞ்சனை இல்லா வாழ்வு கண்டோம்
வாழ்வே அந்தநாள் சொர்க்கம் என்போம்
அவுத்த கூந்தல்
அப்படியே போட்டுக்கிட்டு
போறாங்களே அவலம்
அரைகுறை ஆடைகட்டி
போகும்போது பார்ப்பவருக்கு
வருமல்லோ சபலம்
பெத்தவங்க வச்ச பேரு மங்கிப் போச்சு
பட்டப்பேரு தாங்க
ஊரில பிரபலமாச்சு
பள்ளிக்கூடம் போகாமலே
பட்டப்பேரு வாங்கினோம்
பைசா செலவில்லாமல்
ஊரை சுற்றினோம்
அஞ்சு பைசா வடை விற்ற காலம் போச்சி
அதே வடை இப்ப அஞ்சு ரூபா ஆகிப் போச்சி
மாறிவரும் நாகரீகம் மனுஷ வாழ்க்கை
மாற்றிப் போட்டது
மாறாத மனத்துடன் மனம் வீசிக்கொள்கிறது
இன்னும் நம்ம கிராமம் ...
.நம்ம கிராமம்
அது நல்ல கிராமம்
நாகரீகம் கலக்காத
நயவஞ்சகம் இல்லாத கிராமம்