தெரிந்தும் தெரியாமலும்
விழிகளின் வழியே நீர் வழிந்தால்
விதியே என கிடக்காதே...
மதி கொண்டு வெல்!
கார்முகில் சோகம் சூழ்ந்தால்
இறை குடை கொண்டு செல் ...
தடை வந்த போதும்
துணிவின் துணை கொண்டு நில் !
விடை காண வாழ்க்கை
விடிந்தால் தான் தொடரும் ...
பிறப்பின் போதே இறப்பு அறிந்தும்
சிறப்பறியா வாழ்க்கை வாழ்ந்தே
மடியும் மூட....
அன்பை விதைத்தால்
மரமாகும்
வம்பை விதைத்தால் மண்ணுக்கு
உரமாகும் .....
மனித பிறபென்பது ஒருமுறை
மதயனையாக வாழ்த்தென்ன பயன்
ஆளானபட்டவனுக்கே ஆறடி தான்
அதற்கும் போட்டி நிலை தான்
நீ வெட்டி சாய்த்த மரம் தான்
இறுதியில் உன்னை தாங்குது...
அதை அறியாமலே உன்மனம் தூங்குது !
தான் பெற்ற பிள்ளை மேல் மனம் ஏங்குது
அடுத்தவரை மட்டும் பலி வாங்குது
அறிந்து தான் செய்தாயா?
அறியாமலே முடிப்பாயா?
மரணம் தழுவும் போது தான் விழிப்பாயா!
சொல் மனமே !