வேண்டாத மோகம்
களி ஆட்டமும், கத்தும் இசையும்,
நவ நாகரிகம் என்றால்,
பாட்டும், பரதமும்,
பண்பாடு தரும் சுகமல்லவா !
பயன்பாடு என்ற பெயரால் ,
பரிகசிக்கும் உடையணிந்து ,
உடல் அழகு வெளிக்காட்டுதல் முறையோ ?
பாவாடை, தாவணி, சேலையும்,
பார்ப்பவர் மதிக்கும் உடையல்லவா !
உண்டி சுருங்கின் நன்று !
உடை சுருங்கின் நன்றாமோ ?
நுனி நாக்கு ஆங்கிலம் மேதா விலாசம் என்றால்,
தன்னிகரில்லா தமிழ், தாயினும் மேலான
நம் தாய் மொழி அல்லவா !
வாயில் நுழையாத பேரும்,
கலந்தது தெரியாத பொருளும்,
உடம்பை கெடுக்கும் உணவு உயர்வு என்றால்,
அரிசி மாவு இட்லியும் மிளகோடு பொங்கலும்
செரிக்கும் சரியான காலை உணவல்லவா !
தேனீரும், காப்பியும் சரிதான்
சாயக்கலக்கலாம் கோக்கும், பாண்டாவும்
உன்னத பானமென்றால்
பானக்கமும்,சுக்கு காப்பியும், கூழும், கஞ்சியும்,நீராகாரமும் உடல் உறுதி
தரும் பருகும் பானமல்லவா !
உயர்வை நிறைவையும் புறம் தள்ளி
புரியாத தெரியாத பொருள் மேல்
வேண்டாத மோகம் கொள்ளுதல் சரியோ ?