அவளிடம் கேள்

ஏன் அலைந்து திரிகிறீர்கள் !
அவளிடம்
கேட்டுப்
பழகுங்கள்
அழகை எப்படி
களவெடுப்பது என்று ?
ஏன் பதற்றப் படுகிறீர்கள் !
அவளிடம்
கேட்டுப்
பாருங்கள் .
மலையின் கலை
எப்பபடி
மார்பானதென்று ?
ஏன் கவலைப் படுகிறீர்கள் !
அவளிடம்
கேட்டுப்
பாருங்கள்
காதலால்
எப்படி
கவிதை
புனைவதென்று ?
ஏன் ஏக்கப் படுகிறீர்கள் !
அவளிடம்
கேட்டுப்
பாருங்கள்
அன்பால்
எப்படி
நெருப்பை
அணைப்பதென்று ?