குளம்

வானத்தில் பிறப்பெடுத்து வழிந்தோட
வையத்தில் வார்த்தெடுத்த
வெண்மேகம் வீழ்ந்த
வெள்ளிப் பாத்திரம்
விண்மீன்கள் தவழும்
வானத்தின் சூத்திரம்
காற்றசைவில் கலைந்தாடும்
கண்ணாடியின் செயலுக்கு நிகராகும்
கைக்கொள்ள எவருக்கும் உயிராகும்
கண்ணுக்குள் ஆயிரம் விழிகள் கவிபாடும்
மண்ணில் ஆயிரம் உயிர்கள் அதில்லையேல் வாடும்
மங்காத பகலவன் பார்வைக்கு
தங்காது யாவும் மறைந்தே போகும்

எழுதியவர் : பா.தமிழ்முகிலன் (11-Jan-14, 9:46 am)
சேர்த்தது : thamizhmukilan
Tanglish : kulam
பார்வை : 147

மேலே