வசந்த காலம்
வசந்த காலம்
வெண்ணிற வானத்தில்
கருத்த - நிலவு போல்
இருந்த உன் விழியில்
இன்று
கருமேகம் கவிந்து
இருண்ட வானத்தில்
செந்நிற மின்னல்கள்
ஆம்
சற்று பொறுத்திருந்தால்
பெருமழை பொழிந்து
வெள்ளத்துயரம் வந்திருக்கும்
ஆனால்
வானத்தின் கீழே
ரோஜாத் தோட்டமென
உன் செவ்விதழ் விரிய
நடுவே
மல்லித் தோட்டமென
உன் பல்வரிசை பூக்க
மகிழ்ச்சி வாசம் வீச
அங்கே
வந்தது என்ன?
பெற்ற மகளை பிரிவதால்
இலையுதிர் காலமா?
அல்லது
மகளின் திருமணம்
மங்கலமாக நிறைவுற்ற
மலர் பருவ காலமா?
அன்னையே!!
கலங்காதே !!!
இது பருவ காலம் தான்!!
இது
பிரிவு காலமாய்
உனக்குத் தெரிந்தாலும்
இன்னும் பல அழகிய
இனிய
பாச மணம் வீசும்
உறவுகளை கொண்டு
வந்து சேர்க்கும்
வசந்த காலம்!!!