அழுகை
காகமொன்றிறந்திட்டால் கூடி அழும்
சோகத்தால் காகக் கூட்டம்
ஆனால்!
மனித உயிர் பிரிந்திட்டால் கூடி அழும்
பல கோல ஆத்மாக்கள்
கூடி அழும் அழுகையிலே பல கோலம்....
அன்புக்காய் கதறியழும் ஒரு கூட்டம்
குடும்ப நிலையறிந்து அழும் ஒரு கூட்டம்
பிரிவுத் துயர் மேவியழும் ஒரு கூட்டம்
கைக் குழந்தையழும் காரணமறியா ஒரு பக்கம்
கடன் கொடுத்தார் ஊமையாய் அழுவாரொரு பக்கம்
கண் கசிவார் அழுவார் கண்டு பலர்
பணத்துக்காய் ஒப்பாரி வைப்பார் சிலர்
ஆனால்!
அழவே ஆளில்லை சில வேளை
பாவம் அது அனாதையின் பிரிவாகும்.