டைரி
டைரியின் அவசியத்தை இப்போது உள்ள இளைய சமுதாயத்தினர் ஒரு சாதாரணமாக நினைத்து விட்டனர். முகப்புத்தகம்,ட்விட்டர் மற்றும் பல இணையங்கள் ஒரு பெரிய மாற்றத்தை செய்துவிட்டது. தேடி போய் டைரி வாங்குவதையும், வாங்கி அதை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அன்பளிப்பாக கொடுப்பது இப்போது மிகவும் குறைந்து விட்டது. டைரி எழுதுவதை சிறு வயதில் இருந்தே பெற்றோர்களும் பள்ளியில் ஆசிரியர்களும் ஊக்குவிக்காததே இதற்கு ஒரு பெரும் காரணம். நண்பர்கள் மத்தியில் டைரி எழுதுகிற தோழனோ அல்லது தோழியோ மாட்டி கொண்டால். என்னடா இது மொக்க தனமா இதலாம் பண்ணுற என்று கேலி செய்யும் காட்சி தான். மாற்றங்கள் தேவை தான் ஆனால் ஆரோக்கியமான ஒரு விடயத்தில் மாற்றங்கள் நிகழ்வது வேதனைக்கு உரிய விஷயம். பத்து நிமிடம் அதற்க்கு ஒதுக்கி இன்று நடந்ததை மனதில் நினைத்து எழுதுவது எவ்வளவு சுகம். எழுதியதை சில நாட்களுக்கு பிறகு படிப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி.
இப்படி எல்லாம் டைரியை பற்றி எழுதிருக்கிறேன் என் டைரியில். அதில் இருந்து சிறு தொகுப்பே இக்கட்டுரை.