தமிழ் இனி மெல்ல வாழும் பொங்கல் கவிதைப் போட்டி

அன்பு, நன்றி, நேர்மறை சிந்தனை
இதுவே உலகத் தமிழரின் போதனை...
எத்தனை காலம் வெட்டியாய் பேசுவோம்.. (தமிழா!)
இனி குறைகளைத் தூக்கி வீசுவோம்...
நாடுவோம் நாட்டின் நலத்தையே என்றும்,
தேடுவோம் செல்வம் விரைந்து..
கூடுவோம் ஒன்றாய் இன்றே தமிழா,
பாடுவோம் ஒற்றுமை சிந்து...
ஒருமை வேண்டும், ஒருமை வேண்டும்,
எண்ணம், செயலில் ஒற்றுமை வேண்டும்
கற்றவை அனைத்தும் செயலில் காட்டு..
எதிர்ப்புகள் அனைத்தையும் தீயில் போட்டு!
உலகம் விரவி இருப்பது நம் இனம்,
ஓங்கி வளர்வதே என்றும் நம் குணம்..
எங்கிருந்தாலும் நீ நம்குலம் போற்று,
மொழி இகழ்வாரை வேரோடு தூற்று!!
சாதியும் மதமும் உனை சாய்க்காது,
அநீதியின் கரங்கள் உனை மாய்க்காது..
பொறுமையாய் செய்திடு இங்கோர் யுத்தம்,
தமிழனின் வாழ்வை நினைத்திடு நித்தம்!
என்றும் ஒன்றாய் நாம் நிலைத்திடவே,
தாய் தமிழ்நாட்டைநிலைநிறுத்திடவே,
உலகத் தமிழரின் கனவால் நாளும்,
தரணியில் இனி தமிழ் நன்றாய் வாழும்!!!

நன்றி
ரா. முரளிதரன்

எழுதியவர் : முரளிதரன் (16-Jan-14, 9:25 am)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 239

மேலே