அம்மா தேடுவாள்

நேரத்துக்கு வந்தாலும்,
வாரத்தில் சில நாட்கள்
தாமதித்து வந்தாலும் கோபிப்பாய்...
ஐந்து நிமிடம் கண் பார்த்து பேச தலைகுனிவாய்.
மெல்ல கை எடுத்து கை மேல் வைக்க
வெட்கத்துடன் முகம் மறைப்பாய்!
இடைதுழவி சிறிது அத்துமீற நினைத்தாலோ,
அக்கணமே கிளம்புகிறாய்....
அம்மா தேடுவாள் என்று!!!

எழுதியவர் : முரளிதரன் (16-Jan-14, 11:52 am)
பார்வை : 97

மேலே