நண்பேன் டா

தப்பு செய்ய மனசு
தட்டிக் கேட்குது வயசு
மோதல் இல்லா காதல்
தேவை இல்லை இந்த வயதில்

பாட்டி சொன்ன பாடம்
கேட்காது எங்க ஓடம்
மனசு போடும் வேஷம்
இல்லை எங்க பக்கம்

College உள்ளார போவோம்
Stone-Bench வாழ்க வாழ்வோம்
Library புத்தகம் படிப்போம்
கடலை போட மாட்டோம்

T-Shirt போடும் பொண்ணுங்க
Barல சுத்தும் பெருசுங்க
எங்கள பாத்து வந்தாக்க
Road ஓடி தெரிப்போங்க

Make-up செய்யும் மாலினி
எங்களுக்கு தேவையில்லை போ நீ
கேரளா நாட்டு பச்சக் கிளி
ஷகிலா தெரியும் போங்கடி

குறிக்கோள் உள்ள பாதை
ஏவுகணை போல பறப்போம்
அப்துல் கலாம் சொன்ன வார்த்த
நெல்மணியா பூமியில பிறப்போம்

வானவில் வண்ணம் ஏழு
நண்பன் இருந்த ஜோரு
ஏணிப் படிக்கட்டு வாழ்க
அதுக்கு நட்பு தானே தேவை

கனவுகள் நிறைந்த உலகம்
அதை தினம் தினம்
அடந்திடவோம் நாளும்

Internet Google வார்த்தை
கொட்டிக் கிடக்காது மோத
ஒரு நொடி கணமே போதும்
உலகம் எங்கள பேச

எழுதியவர் : (16-Jan-14, 1:35 pm)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 878

மேலே