மாறுதல் தருமோ

குரங்குக் கொள்கைகையினை
உடும்புபோல் பிடித்துக்கொண்ட
யானைகளின் தாவல்களால்
மலர்ந்திருக்கிறது தாமரைத்தடாகம்!

முதலைகளை
வாழ வைப்பதற்காக
மீன்களோடு மான்களையும்
இரையாக்கும்
நரிமனசு தாமரைக்கு

சிங்கங்களை
கர்ச்சிக்கப் பயிற்றுவிக்கும்
வித்தைகளால்
உலக அசிங்கமான பின்னும்
இன்னும் புலிவாலை
பிடித்துக் கொண்டு
பிதற்றிக்கொண்டிருக்கிறது
தாமரையின் வேர்கள்.

இதோ
இந்த ஆரணியத்தில்
மீண்டும் பலிக்கடாக்கள் மீது
கரிசனம் காட்ட வந்துவிட்டது
இன்னொரு குட்டி வைபோகம்.

மாடுகளை விரட்டிவிட்டு
பதாகை ஒட்டும்
ஓநாய்களின் பசிக்கு
மனிதம் கொடுத்து மகிழும்
மிருகத்தனங்களுக்கு
வேட்டையாடப் படுதலுக்காக
காத்திருக்கிறோம் ஒரு விலங்காய்!

அழகியத் தடாகத்தில்
சிக்கவைக்கும் வேர்களுடன்
மலர்ந்திருக்கும் தாமரை
சிக்கல் வைக்கும் தேர்தல்
மக்களுக்குத் தருமோ மாறுதல்?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (19-Jan-14, 1:49 am)
பார்வை : 188

மேலே