அரசியல் குப்பை மக்களுக்கு குட்பை
எழுத நினைக்கையில்
எண்ணம் வரவில்லை
படுத்து உறங்கையில்
சிந்தனை அருவியாய் கொட்டுதே
எல்லாம் கனவுகளாய்....
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
பசுவிற்கு தன் மகனை பலி கொடுத்த மனுநீதி!!
நீதிக்காக மதுரை எரித்த கண்ணகி
நிழலுக்காக மரம் நட்ட அசோகன் !!
வண்ண வண்ணமாய் வந்து போகிறது எண்ணத்தில் கருப்பு வெள்ளை காட்சிகளாக....
கண்விழித்தால் கண்ட எடமெல்லாம் குப்பைகளாக...
உறங்கியது நடைபாதையில்
விழித்து எழுகிறேன் குப்பை மேட்டில்!!
கண்ணெதிரில் களவு நடந்தும்
கண்கட்டி நிற்கிறேன் ...!
எனக்கு வேண்டும் பதவி அதற்காக
கேட்டேன் உதவி பயனில்லை
பணம் காட்டினால் பதவி கைமேல்
வந்த பின் அடைக்க இருக்கு நெறைய கடன்
உனக்கு பணி செய்ய நேரம் இல்லை எனக்கு
கொடுத்தவனும் கேட்கிறான்
வாங்கியவனும் பார்க்கிறான்
அடுத்தவர்க்கு உதவிட அல்ல பதவி
என்னை மேலும் செழிபாக்க
மீண்டும் மீண்டும் குப்பை தொட்டி
கண்முன் நின்றது.
வாழ்க்கை ஒன்றும் கனவுகளல்ல
ஒருமுறை இழந்தால் மீள்வது கடினம்
பேருக்காக உழைக்க மகான்கள் அல்ல
என் பேரன் பேத்தியும் கூட
உழைப்பை கனவிலும் நினையாதபடி
சேர்த்தால் அது தான் பெருமை!!
கருத்துகள் மக்களுக்கு
கல்லாமட்டும் எனக்கு !!