மனித அன்னங்கள்

மனித அன்னங்கள்..

எள்ளி நகையாடி
பொறாமை அனல் அள்ளி வீசும்
வஞ்சக மனிதவுறவின் நடுவே
குட்டக் குட்டக் குனிந்து
அன்புக்கு அடிமையாய்
உண்மை விளம்பியாய்
நேர்மை பதுமையாய்
ஆதரவு கானல் தேடி
உயிர்த்திருக்கும் சில
நல் மனிதம்
பாலில் நீர் பிரிக்கும்
அன்னப் பறவை போல்
கலி கால ஓட்டத்தில்
மறைந்துதான் போய்விடுமோ..!!

நல்லார் ஒருவரால்
எல்லோர்க்கும் பெய்யும்
மழை வரவு
குறையத்தான் வேண்டுமோ..

நஞ்சுமிகு பேரளவு வஞ்சக நீர் விலக்கி
மிஞ்சும்துளி அன்புப்பால் பருகும்
பஞ்சுமன நல்மனித அன்னங்களை
நெஞ்சுரமண்ணில் மறையத்தான் விடலாமோ..!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (18-Jan-14, 10:48 pm)
பார்வை : 56

மேலே