கண்டாங்கி, கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு

சிகப்பு சேலை அணிந்த சீமாட்டி
என் மனதை கொள்ளை கொண்டாளே
அவள் புன்சிரிப்பை காட்டி
தூரத்தில் நின்றாளே ஆற்றின் வளைவு காட்டி
என் கால்கள் அவள் நின்ற திசை
நோக்கி நகர்ந்ததே போக்கு காட்டி
சென்றாள் அன்ன நடை காட்டி
என் கண் அவளைப் பின்
தொடர்ந்ததே என்னிடம் டூ காட்டி
என்னை அவள் பார்த்த கணம்
தென்றல் வீசியதே என்னை நோக்கி
அவள் பார்த்த பின் நான்
என்னை விட்டு ஓடினேனே விலகி விலகி
பூவைச் சுற்றிய சேலையின் நடுவே
தெரிந்ததே ஒரு வெள்ளிக் கீற்று
என் கைகள் அதனை பக்கத்
துணையாக்க பறந்ததே வெள்ளிடை நிரப்ப ...