அர்ப்பணம்

இரவின் மடியில்
விடியலை நோக்கி
சுதந்திரம் - சுவாசிக்க
காத்துக்கிடக்கும்
கல்லறைப் பூக்கள் நாங்கள்

வாழ வக்கில்லாமல்
புதைந்து கிடக்கின்றோம்
சொந்த பூமியில்

எங்கள் புதைக்குழிக்குள்
புன்னகை சிந்தும் - எவனோ
ஒருவனின் - எண்ணங்களுக்கு
ஆளானவர்கள் நாங்கள்

புறமுதிகிட்டு ஓடாமல்
எங்கள் மார்பு - அறுக்கப்படும்
என்று தெரிந்தும்
நெஞ்சை நிமிர்த்தி நின்றோம்
எங்கள் சந்ததியை
என்னி..

சொந்த மண்ணை - அள்ளி
தின்ன ஆசைப்பட்டவர்கள்
மண் தின்கிறது - எங்களை
சந்தோசம்தான்

எங்களை புதைக்கப்படவில்லை
அவர்கள் - விதைத்துள்ளார்கள்
எங்கள் சந்ததிக்கு
விதையாய்

என் சந்ததியே - போராடு
சுதந்திர காற்று கிடைக்கும் வரை

இரவின் மடியில்
விடியலை நோக்கி
சுதந்திரம் - சுவாசிக்க
காத்துக்கிடக்கும்
கல்லறைப் பூக்கள் நாங்கள்

மண்ணுள் மக்காமல்
அப்படியே - காத்துக்கிடக்கின்றோம்
எங்களை அள்ளி
வெளியே போடுங்கள்
சுதந்திரம் காற்று - எங்கள்
உடல்கள் மீதாவது
பட்டுப் போகட்டும்

எழுதியவர் : Amirthaa (20-Jan-14, 5:01 pm)
Tanglish : arpanam
பார்வை : 457

மேலே