சுனாமி
கடலோரம் அடித்தக் காற்று
அள்ளித் தூக்க
அறை கூவலுடன் வந்த அலையோ
தூக்கி அடிக்க
வலை விரித்த மீனவனோ
பாய்ந்து திரும்ப
படகும் அதுனுளிருந்த
பொருட்களும்அடித்துச் செல்ல
கடல் பேரோசையுடன்
சீறி ஊருக்குள் புக
குழந்தைகளும் பெண்களும்
பதறி ஓட
அங்கு நிகழ்ந்தது
ஓர் அவலம் .
அங்கு அரங்கேறியது
ஓர் ஆபத்து
சுனாமி என்ற பெயருடன்