நிலா வீடு

நிலா வீடு !
அன்றும் நீ வழக்கம்போல்
என்னுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாய்...!
_
அமாவாசையா இல்லை பவுர்ணமியா, வளர்பிறை நாளா
இல்லை தேய்பிறை நாளா,
அன்று எந்த நாள் என்றுகூட
எனக்கு இப்போது ஞாபகமில்லை...!
_
திடீரென அன்று உனக்கு,
தினமும் இரவில் - உன்
மொட்டைமாடிக்கு மேல் உதிக்கும் நிலவின் ஞாபகம் வந்தது...!
_
இருட்டு வானத்தில் தனியே தத்தளிக்கும் நிலவில், நாம் மட்டும் தனியே வசித்தால்
எப்ப்டியிருக்கும் என கேட்டாய் நீ...
சிரித்தேன் நான்...!
_
நீல் ஆம்ஸ்டாங்குக்கு முன்னே
நீயும் நானும் பிறந்திருக்க வேண்டும்...
என் பதிலுக்கு காத்திராமல்
நீயே பேசத்தொடங்கினாய்...!
_
எவரும் இல்லாத நிலவு..!
எதிர்ப்புகளே இல்லாத காதல்..!!
மவுனம் உடைக்கும் பேச்சுக்கள்...!
_
வெட்கத்தை மறந்த தீண்டல்கள்...!!
ஏதேதோ சொன்னாய் நீ...
_
உன் மடிமேலே என் தலைசாய வைத்து நீ என்
தலைகோதி விடவேண்டும்...!
_
வெட்கம் சிவக்கும் உன் கன்னங்களில் நான் என் உதடுகளால் கவிதை எழுத வேண்டும்...!!
_
நானும் என் ஆசைகளை அடுக்கினேன்...!
வெட்கப் புன்னகை
பூத்தாய் நீ...
_
நாள் முழுவதும் உன் அருகில்
நான் வேண்டும்...!
நிலவு உடைந்து
நம் உயிர் பிரியும் வரை
நீயும் நானும் காதல் செய்ய வேண்டும்...!!
_
நீயும் உன் ஆசைகள என்னிடம் சொல்ல மறக்கவில்லை...!
உன் மடியிலே என் மரணம் வேண்டுமென நான் சொல்ல,
அதை நீ ஏற்றுக்கொள்ளாமல்
நான் சொன்னதையே
நீயும் திருப்பிசொல்ல,
காதலுக்கிடையிலும்
நாம் இருவரும் கண்ணீர் விட்டது அன்றுதான்...!
_
ஈர முத்தத்தால்
இருவரும் மாற்றிமாற்றி
விழிகளை துடைத்துக்கொள்ள,
உன் எண்ணம் எல்லாம்
இன்னும் நிலவிலே இருந்தது...!
_
மீண்டும் உன் ஆசைகளுடன்
கற்பனைகள் கலக்க, அன்று இரவில் நம் பேச்சில் முழுவது
நிலாவீடே நம் வசிப்பிடமானது...!
_
அந்த நிலவுப்பயணத்தை
அழகாய் நான் கவிதையாக்கி
அன்று எழுதிய வரிகளில் சில
இன்றும் எனக்கு ஞாபகமிருக்கிறது...!
_
ஒற்றை நிலவை
ஒரே இரவில் நாம் சுற்றிவந்தோம்..!
_
இரவு விடிந்ததும், நாம் கற்பனையிலே நிலவில் நாம் ஒரு வாழ்க்கையை
வாழ்ந்து முடித்திருந்தோம்...!!
_
அந்த தருணங்களின் ஒவ்வொரு நொடியும், இன்னும் எனக்கு
ஞாபகமிருக்கிறது...!
_
இப்பொழுதும் மொட்டைமாடிக்கு மேல்
நிலவு உதிக்கிறது...!
நிலவை சுமந்துகொண்டே
பல இரவுகள் நீள்கிறது...!
_
நினைவுகளை சுமந்துகொண்டு
இன்னும் நான் மிச்சமிருக்கிறேன்...!
நான்...!! நிலவு...!! இரவு...!!!
எல்லாமே இருக்கிறது இங்கு...!
தனியாக... ஆனால்
இன்னொரு நிலாப்பயணம் போக,
_
நீ மட்டும் இல்லை...!
என்னிடம்...

எழுதியவர் : Akramshaaa (25-Jan-14, 12:28 pm)
Tanglish : nila veedu
பார்வை : 83

மேலே