மண்டியிடுகிறான் ஹிந்தியத்திடம்
மீத்தேனெடுக்க அலைகிறதொரு கூட்டம்...
மின்சாரமெடுக்க அணுவைப் பிளக்கிறதொரு கூட்டம்...
மீனவனை விடாமல் வீழ்த்துகிறதொரு கூட்டம்...
கச்சத்தீவு இலங்கைக்கேவென கோஷிக்கிறதொரு கூட்டம்...
காவிரியில் பங்கில்லையென்று புன்னகைக்கிறதொரு கூட்டம்...
கட்சிகளெல்லாம் கபட நாடகத்தில் கதாப்பாத்திரங்களாக.....
நாயகனும்-
நாயகியும்... கடிதமெழுதியே காலந்தள்ள
மானமும் வீரமும் உயிரென்றிருந்த தமிழன்-
இன்று
மண்டியிடுகிறான் "ஹிந்தி"யத்திடம்.